சுடிதார் ஒன்றும் எனக்கு பிடித்த ஆடை இல்லை
ஒரு நாள் அகில் பிங்க் நிற சுடிதாரில் வந்து
ஒரு புன்னகையை என் மேல் வீசிவிட்டு செல்லும் வரை.
Tuesday, November 2, 2010
காதல் வெண்பாக்கள்
மண்ணில் காதலை தேட அதைஉன்
கண்ணில் கண்டேன் அகில்.
நாளெல்லாம் எனக்கு நாளெல்ல நாளாகும்
நானுன்னை பார்க்கும்நாள் அகில்.
குழலினிது யாழினிது என்ப அகிலின்
சிரிப்பொலியை கேட்கா தார்.
விண்ணில் தெரியும் பிறைநிலவு அகிலின்
கண்ணின் மேல்இமை பார்.
பெண்டிரில் தேவதை யாரென தேட
கண்டேன் உன்னை அகில்.
பகலில் தெரியும் பௌர்ணமி நிலவு
அகிலின் முகமென்று அறி.
அலுவல் சிக்கலெல்லாம் காணமல் போய்
சிலுசிலுவென வீசும் தென்றலிலாடும் பூபோல்
என்மனம் ஆடினால் அதனின் காரணம்என்
அழகு அகில்என்று காண்.
அதிக கைபேசி கட்டணம் வேண்டுமெனில்
காதலி இருக்க வேண்டுமென்ற உண்மையை
என்னில் புரிய வைத்த அழகுக்
கன்னி இந்த அகில்.
கண்ணில் கண்டேன் அகில்.
நாளெல்லாம் எனக்கு நாளெல்ல நாளாகும்
நானுன்னை பார்க்கும்நாள் அகில்.
குழலினிது யாழினிது என்ப அகிலின்
சிரிப்பொலியை கேட்கா தார்.
விண்ணில் தெரியும் பிறைநிலவு அகிலின்
கண்ணின் மேல்இமை பார்.
பெண்டிரில் தேவதை யாரென தேட
கண்டேன் உன்னை அகில்.
பகலில் தெரியும் பௌர்ணமி நிலவு
அகிலின் முகமென்று அறி.
அலுவல் சிக்கலெல்லாம் காணமல் போய்
சிலுசிலுவென வீசும் தென்றலிலாடும் பூபோல்
என்மனம் ஆடினால் அதனின் காரணம்என்
அழகு அகில்என்று காண்.
அதிக கைபேசி கட்டணம் வேண்டுமெனில்
காதலி இருக்க வேண்டுமென்ற உண்மையை
என்னில் புரிய வைத்த அழகுக்
கன்னி இந்த அகில்.
Friday, June 4, 2010
Time
நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கிறோம்
என்பதை அவ்வப்போது ஞாபகப் படுத்துகிறாள்
"உங்கள் balance குறைவாக உள்ளது என்பதை
கவனிக்கவும்" என்று ஆங்கிலம் கலந்த தமிழில்
கூறும் கணிப்பொறி மங்கை!!!
வெட்கம்
நாம் இருவரும் அமர்ந்து இருந்தோம்!!
என்னை பார்த்து நீ சிரித்த சிரிப்பும்
இதமாக வீசிய அந்த இரவு நேர காற்றும்
என் ஆன்ட்ரோஜென் ஹார்மோனோடு மல்லுகட்ட
நான் உன்னை நெருங்கினேன்!!!!
நீ என்னை பார்க்க வெட்க பட்டு
சேலையை எடுத்து உன் அழகு முகத்தை மறைத்தாய்!!!
நமக்கு மேலே இருந்த நிலவு
நம்மை பார்க்க வெட்க பட்டு
மேகத்தை எடுத்து அதன் முகத்தை மறைத்தது!!!!
பிடித்த பாடல்
ரேடியோவில் எனக்கு பிடித்த பாடல் என்ன
என்று கேட்டார்கள்!!
அவள் என்னிடம் பேசும் போது சிணுங்கி சிரிக்கும்
அந்த மென் சிரிப்புதான் பிடித்த பாடல் என்கிறேன் நான்!!!
Tuesday, May 18, 2010
மறதி நன்று
Wednesday, December 2, 2009
Matrimonial
Subscribe to:
Posts (Atom)




