Friday, June 4, 2010

Time


நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கிறோம்
என்பதை அவ்வப்போது ஞாபகப் படுத்துகிறாள்
"உங்கள் balance குறைவாக உள்ளது என்பதை
கவனிக்கவும்" என்று ஆங்கிலம் கலந்த தமிழில்
கூறும்  கணிப்பொறி மங்கை!!!

வெட்கம்


ஒரு கோடை கால இரவு வேளையில் கடற்கரையில்
நாம் இருவரும் அமர்ந்து இருந்தோம்!!
என்னை பார்த்து நீ சிரித்த சிரிப்பும்
இதமாக வீசிய அந்த இரவு நேர காற்றும்
என் ஆன்ட்ரோஜென் ஹார்மோனோடு மல்லுகட்ட
நான் உன்னை நெருங்கினேன்!!!!
நீ என்னை பார்க்க வெட்க பட்டு
சேலையை எடுத்து உன் அழகு முகத்தை மறைத்தாய்!!!
நமக்கு மேலே இருந்த நிலவு 
நம்மை பார்க்க வெட்க பட்டு
மேகத்தை எடுத்து அதன் முகத்தை மறைத்தது!!!!   

பிடித்த பாடல்


ரேடியோவில் எனக்கு பிடித்த பாடல் என்ன
என்று கேட்டார்கள்!! 
அவள் என்னிடம் பேசும் போது சிணுங்கி சிரிக்கும்
அந்த மென் சிரிப்புதான் பிடித்த பாடல் என்கிறேன் நான்!!!