Wednesday, December 2, 2009

Matrimonial


ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றான் பாரதி
பாவம்! செல்லம்மாவை மணம் முடிக்க எந்த
திருமண விளம்பரங்களை நாடி இருக்க
வேண்டிய கட்டாயம் இல்லை அவனுக்கு

Friday, November 13, 2009

வீடு

பொருட்கள் எதுவும் கலைக்கப்படாத அலமாரி
கிறுக்கல்கள் எதுவும் இல்லாத சுவர்
சத்தம் இல்லாத அமைதியான அறைகள்
என்று எல்லாம் சரியாக ஆனால்
உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது
குழந்தைகள் இல்லாத அந்த வீடு...

Monday, November 9, 2009

படித்த கவிதை

அங்கும் இங்கும் ஓடி சேட்டை செய்த ஆட்டை
அடிக்க போன என்னை தடுத்து அம்மா சொன்னாள்
அடிக்காதடா அது கருப்பசாமிக்கு நேந்து விட்டது என்று...