Tuesday, November 2, 2010

காதல் வெண்பாக்கள்-2

வெண்ணிலவை பூமியில் காண அகில்இந்த
பெண்ணிவளை வந்து பார்.

கண்ணிருந்தும் குருடர் யாரெனில் அகில்இந்த
பெண்ணிவளை காணா தார்.

இல்லையொரு தேவதை என்பார் அகிலிருக்கும்
சில்லைக்கு வந்து பார்.









பிங்க் நிற சுடிதார்

சுடிதார் ஒன்றும் எனக்கு பிடித்த ஆடை இல்லை
ஒரு நாள் அகில் பிங்க் நிற சுடிதாரில் வந்து
ஒரு புன்னகையை என் மேல் வீசிவிட்டு செல்லும் வரை.

காதல் வெண்பாக்கள்

மண்ணில் காதலை தேட அதைஉன்
கண்ணில் கண்டேன் அகில்.



நாளெல்லாம் எனக்கு நாளெல்ல நாளாகும்
நானுன்னை பார்க்கும்நாள் அகில்.



குழலினிது யாழினிது என்ப அகிலின்
சிரிப்பொலியை கேட்கா தார்.


விண்ணில் தெரியும் பிறைநிலவு அகிலின்
கண்ணின் மேல்இமை பார்.


பெண்டிரில் தேவதை யாரென தேட
கண்டேன் உன்னை அகில்.


பகலில் தெரியும் பௌர்ணமி நிலவு
அகிலின் முகமென்று அறி.


அலுவல் சிக்கலெல்லாம் காணமல் போய்
சிலுசிலுவென வீசும் தென்றலிலாடும் பூபோல்
என்மனம் ஆடினால் அதனின் காரணம்என்
அழகு அகில்என்று காண்.


அதிக கைபேசி கட்டணம் வேண்டுமெனில்
காதலி இருக்க வேண்டுமென்ற உண்மையை
என்னில் புரிய வைத்த அழகுக்
கன்னி இந்த அகில்.